Published on 12/09/2021 | Edited on 12/09/2021
குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. விஜய் ரூபானி முதல்வராக இருந்துவந்தார். இந்தநிலையில் நேற்று (11.09.2021) விஜய் ரூபானி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி, கட்சியை வலுப்படுத்தும் விதமாக பாஜக, விஜய் ரூபானியிடம் இருந்து முதல்வர் பொறுப்பை பறித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்பொழுது குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். கட்லோடியா தொகுதியிலிருந்து குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பூபேந்திர படேல் என்பது குறிப்பிடத்தக்கது.