Published on 30/01/2019 | Edited on 30/01/2019
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், நாடு முழுவதும் தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாஜக எதிர்ப்பு கட்சிகள் ஒன்றிணைந்து மகா கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இதனை விமர்சிக்கும் வகையில் இன்று உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியுள்ள அமித் ஷா, ' மகா கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் பதவியில், திங்கள்கிழமை மாயாவதியும், செவ்வாய்கிழமை அகிலேஷ் யாதவும், புதன்கிழமை மம்தா பானர்ஜியும், வியாழக்கிழமை ஷரத் பவாரும், வெள்ளிக்கிழமை தேவகவுடாவும், சனிக்கிழமை ஸ்டாலினும் பிரதமராக இருப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை அந்த பதவிக்கும், நாட்டிற்கும் விடுமுறை விடப்படும்' என கூறியுள்ளார்.