நடப்பு நிதியாண்டில் பொருளாதாரத்தில் 7.4% வளர்ச்சி ஏற்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மும்பையில் சிறந்த வங்கிகளுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன் "நடப்பு நிதியாண்டில் பொருளாதாரத்தில் 7.4% வளர்ச்சி ஏற்படும். அடுத்த ஆண்டிலும் இதே வேகம் தொடரும். ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு இந்திய அரசு எப்போதும் துணை நிற்கும். உலகின் மிக வேகமாக வளர்ச்சி பெறும் நாடாக இந்தியாவை உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் கணித்துள்ளது. இந்த கணிப்புகள் ரிசர்வ் வங்கியுடன் பொருந்துகிறது." எனக் கூறியுள்ளார். மேலும், "இணைய வழி பணப் பரிமாற்றம் மக்களால் இலவசமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இணைய வழி பணப்பரிமாற்றத்தில் அதிக வெளிப்படைத் தன்மையை நம்மால் அடைய முடியும். எனவே, யூபிஐ சேவைக்கான கட்டணம் நியமிக்கும் எண்ணம் தற்போது இல்லை" எனக் கூறியுள்ளார் .