நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைப்பெறுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். இதில் இந்தியா முழுவதிலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் , தங்கம் உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் 2385.65 கோடி ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் சுமார் 174.66 கோடி ரூபாய் பணமும் , தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவற்றின் மதிப்பு சுமார் 283.63 கோடி ரூபாய் உள்பட தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூபாய் 468.72 கோடி ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம் இந்தியாவிலேயே பணம் மற்றும் தங்கம் , வெள்ளி பறிமுதலில் தமிழகத்திற்கு முதலிடம். இந்தியாவில் முதற்கட்ட மக்களவை தேர்தல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. எனவே தமிழகம் உட்பட பல மாநிலங்களுக்கான இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைப்பெறும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் உயர வாய்ப்பு உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உதவும் வகையில் இந்தியாவில் பெரும்பாலான முக்கிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பி.சந்தோஷ் , சேலம் .