டெல்லியில் கரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியைப் பொறுத்தவரைத் தினம்தோறும் கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வந்த சூழலில், கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்லக் குறைந்து வருகிறது. இதுவரை டெல்லியில் கரோனாவால் 22,111 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, வீட்டில் வருமானம் ஈட்டுவோர் கரோனாவால் இறந்திருந்தால் அக்குடும்பத்திற்கு மாதம் 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும், கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். அதேபோல கரோனாவால் பெற்றோர்கள் இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் எனவும், அவர்களுக்கு 25 வயது ஆகும்வரை மாதம் 2,500 ரூபாய் வழங்கப்படும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.