Published on 16/08/2021 | Edited on 16/08/2021
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள மணியாரா பகுதியில் நேற்று இளம் பெண் ஒருவர் கரோனா தடுப்பூசி செலுத்த மருத்துவமனை சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த செவிலியர்கள் தவறுதலாக அடுத்தடுத்து இரண்டு முறை கரோனா தடுப்பூசி செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிலைமை மோசமானதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள்.