Skip to main content

"எழுப்பப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் தடுப்பூசி சாதனை பதிலளித்துள்ளது" - பிரதமர் மோடி உரை!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

narendra modi

 

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், நேற்று (21.10.2021) இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

 

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி பேசியதாவது,

 

“257 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா கடினமான இலக்கை எட்டியுள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் இந்த சாதனை சாத்தியமானது. மக்களுக்கு வாழ்த்துகள். 100 கோடி தடுப்பூசி என்பது ஒரு புதிய சாதனையின் தொடக்கம்.

 

இந்தியாவின் தடுப்பூசி திட்டம் உலகளவில் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. உலகளவில் தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டபோது, இந்தியா குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. பெரும் மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, தடுப்பூசிகளை எப்படி பெறுவார்கள், எப்படி செலுத்துவார்கள் என கேள்வியெழுப்பப்பட்டது. எழுப்பப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் 100 கோடி தடுப்பூசி சாதனை பதிலளித்துள்ளது.

 

அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தைக் கொண்டுவந்து இந்த சாதனையை எட்டியுள்ளோம். தடுப்பூசி செலுத்த தொடங்கியபோது முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்பதை தவிர்த்தோம். கடைக்கோடி மக்களுக்கும் தடுப்பூசி செல்வதை அரசு உறுதி செய்தது.”

 

 

சார்ந்த செய்திகள்