
பெண்களுக்கு எதிரான மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்பாக அதிகப்படியான புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஓசூரில் வீடு புகுந்து சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓசூரில் அக்கா தங்கை என இருவர் வீட்டில் இருந்த நிலையில் வீடு புகுந்து ஐந்து சிறுவர்கள் அவர்களிடம் தாக்குதலில் ஈடுபட்டதோடு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் 5 சிறுவர்களையும் பிடித்த போலீசார் அவர்களை சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களில் நான்கு பேர் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தவர்கள் என்பது மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மற்றொருவர் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு கட்டிட வேலை செய்து வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரியில் இதற்கு முன்பு அரசுப் பள்ளியில் மாணவி ஒருவர் ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.