Skip to main content

மீண்டும் இலங்கை பிரதமரானார் ரணில் விக்ரமசிங்க

Published on 16/12/2018 | Edited on 16/12/2018
r

 

இலங்கையில் திடீரென பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே நேற்று பதவி விலகியதை அடுத்து இலங்கை புதிய பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார்.  இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேன பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  

இதையடுத்து, ஜனநாயகத்தை காக்க போராடிய மக்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.   

 

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் ரனில் விக்ரமசிங்கவை  நீக்கிய சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி புதிய பிரதமராக நியமித்தார். இதனால் இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் நிலவியது. மேலும் குழப்பம் அதிகரிப்பதை விரும்பாத ராஜபக்சே, நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்றார்.


 

சார்ந்த செய்திகள்