Published on 21/06/2022 | Edited on 21/06/2022

கல்வியாளரும், அரசியல் விமர்சகருமான ராமசுப்ரமணியன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
அண்மையில் தமிழகத்தில் கோயில்களில் பராமரிப்பை செழுமைப்படுத்தவும், பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, குழுவிற்கான உறுப்பினர்களை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. 17 பேர் கொண்ட அந்த குழுவில் கல்வியாளர் ராமசுப்ரமணியனும் அலுவல் சாரா உறுப்பினராக இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த ராமசுப்ரமணியன் தான் எழுதிய 'நான் சென்ற சில நாடுகள்' எனும் புத்தகத்தை தமிழக முதல்வருக்கு வழங்கினார்.