
பொது முடக்கத்தால் அரசியல் பிரமுகர்களும் திரைத்துறை பிரபலங்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்! வீட்டில் ஓய்வில் இருக்கும் அவர்கள், தங்களின் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவதுடன் பயனுள்ள வகையில் நேரத்தை வடிவமைத்துக் கொள்கின்றனர்.
ரஜினி என்ன செய்கிறார் என சில தகவல்கள் நமக்கு கிடைத்தன. போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிலிருந்து காலை 11 மணிக்கு வெளியே புறப்படும் ரஜினி, பழைய மாமல்லபுரம் சாலையில் இருக்கும் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்குச் செல்கிறார். அங்கு மதிய உணவு சாப்பிடுகிறார். அதன் பிறகு 4 மணி வரை உலக அளவில் புகழ் பெற்ற புத்தகங்களை வாசிக்கிறார். அதில் உள்ள முக்கிய விஷயங்களை அடிகோடிட்டு வைக்கிறார் ரஜினி.
மாலையில் பண்ணையை சுற்றி நடைப்பயிற்சி, அதன் பிறகு அரை மணி நேரம் தியானம், இதனையடுத்து மூச்சு பயிற்சி எடுத்துக் கொள்கிறார் ரஜினி. முக்கியமான சிலரிடம் ஃபோனில் அலாவுலாவுகிற ரஜினி, நடப்பு அரசியல் குறித்தும் விவாதிக்கிறார். அதனையடுத்து, குளிர்ந்த நீரில் குளித்து முடித்து விட்டு, இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்து விடுகிறார் ரஜினி. கடந்த இரு மாதங்களாகவே ரஜினி தனது பகல் நேரத்தை இப்படித்தான் வடிவமைத்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள் அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள்.