காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டில் நடுவர் மன்றம் 192 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டிருந்த நிலையில் அதனை உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும்.
தமிழகத்தில் நிலத்தடி நீர் 10 டிஎம்சி இருப்பதால் காவிரியில் நீர் குறைக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்திற்கான நீர் ஒதுக்கீடு குறைப்பால் கர்நாடகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதலாக கிடைக்கும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் காவிரியில் 284.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கிடைக்கும். கேரளாவிற்கு 30 டிஎம்சி நீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரும் என்ற நடுவர்மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை.
நடுவர் மன்றத் தீர்ப்பில் இருந்த சில பிழைகள் இந்த தீர்ப்பில் சரிசெய்யப்பட்டுள்ளன.
1892, 1924 ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும். அதன்படி, தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என ஒப்பந்தத்தில் உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகின்றன.
இறுதிதீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது. தீர்ப்பின்படி மாதாந்திர அடிப்படையில் தண்ணீரை திறந்தவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Published on 16/02/2018 | Edited on 16/02/2018