தமிழக அரசியல் களத்தில் கால்பதித்துள்ள ரஜினியும், கமலும் தங்களது அரசியல் பயணங்களுக்கான திட்டங்களை வகுத்து வருவதுடன், நிர்வாகிகளையும் நியமித்து உறுப்பினர்களையும் இணைத்து வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டி என்று ரஜினி அறிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந் தேதி தனது புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி, அன்றைய தினமே அவர் தனது கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்ய உள்ளார். தனது அரசியல் பயணத்தை துவங்குவதற்கு முன்பு சிலரை நேரில் சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்ற அவர், அங்கு ரஜினியை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி,
கட்சி தொடங்குவதற்கான அழைப்பிதழை கொடுத்தார். அரசியல் பயணம் தொடங்கும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆண்டவனின்ஆசிர்வாதம் கமலுக்கு கிடைக்க வேண்டுகிறேன். கமலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன். என் பாணி வேறு, கமல் பாணி வேறு ஆனால் மக்கள் நலனே முக்கியம். பணத்துக்காகவோ, புகழுக்காகவோ கமல் அரசியலுக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு கூறினார்.
படம்: எஸ்.பி.சுந்தர்