Skip to main content

ரஜினிக்கு ஆதரவா? வைரலாகும் மு.க.அழகிரி அறிக்கை

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
 

தமிழக அரசு மேல்முறையீடு செய்ததற்கு நடிகர் ரஜினிகாந்த், ''இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவு கூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளைப் பாருங்கள்'' எனக் கூறியிருந்தார்.
 

இந்தநிலையில், ரஜினியின் கருத்தை வரவேற்கும் விதமாக, ''உண்மையை உரக்க சொன்னிங்க நண்பா...'' என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி டுவிட்டிரில் பதிவிட்டிருந்ததாகச் செய்திகள் பரவியது.
 

இதற்கு மறுப்பு தெரிவத்துள்ளார் மு.க.அழகிரி. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மதுக்கடைகளை மீண்டும் திறந்தால் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள்" என்று நண்பர் ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் பதவி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் கருத்தை நான் ஆதரிப்பது போன்று என் படத்தோடு சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள். அதுகுறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் எந்தக் கணக்கும் இல்லை. அதை நான் பயன்படுத்தவும் இல்லை என்று கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்