Published on 08/04/2019 | Edited on 08/04/2019
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சம்மந்தப்படுத்தி பேசியதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது தமிழ்நாடு அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு தடைகோரி ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணைக்கு தடைவிதித்திருந்தது. அந்த தடையை நீக்கவேண்டுமென்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. தற்போது இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், இவ்வாறு கூறியுள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும் தனிமனித தாக்குதலில் ஈடுபடவேண்டாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.