Skip to main content

‘இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட வேண்டும்’ - தமிழ்நாடு அரசு உத்தரவு

Published on 16/04/2025 | Edited on 16/04/2025

 

Tamil Nadu government order Government orders should now be published only in Tamil

தமிழ் மொழியில் மட்டுமே இனி அரசாணைகளை வெளியிட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கும் அனுப்பும் அரசாணைகள், சுற்றறிக்ககள் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும். கற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயெ இருக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து வரும் கடிதங்களுக்கு, தமிழ் மொழியிலேயே தான் பதிலளிக்க வேண்டும். அதே போல், அனைத்து அரசுத்துறை இனி தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும். ஆங்கில அரசாணைகள் தமிழில் மொழி பெயர்க்க, செய்தி துறைக்கு அனுப்பலாம் என அரச்ய் அதிகாரிகள், அலுவலர்கள், ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த பாம்பன் ரயில் பாலத்தை கடந்த 6ஆம் தேதி திறந்து வைத்த பிரதமர் மோடி, ‘தமிழ்நாட்டின் சில தலைவர்களிடமிருந்து கடிதங்களில் அவர்கள் யாரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை. நாம் தமிழைப் பற்றி பெருமைப்படுகிறோம் என்றால், அனைவரும் குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்