கஜா புயல் நிவாரணத்தை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பப்படுகிறது. இதற்கு காரணம்..புயல் நிவாரண பணிகளை கண்காணிக்கும் அதிகாரியான சத்யகோபால் ஐஏஎஸ்.
இதுவரை கஜா புயலுக்காக அனுப்பப்பட்ட பொருட்களும், பணமும் அந்த பகுதி மக்களுக்கு போய் சேரவில்லை. அதை அந்த பகுதியில் உள்ள அதிகாரிகளும் அதிமுகவினரும் சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள்.
பல நூறுகோடி ரூபாய்க்கான நிவாரண நிதி மற்றும் பொருட்கள் தமிழக அரசிடம் வந்துள்ளது. முதலமைச்சரின் கஜா புயல் நிவாரண நிதியாக 100க்கும் மேற்பட்ட கோடிகள் சேர்ந்துள்ளது. இதில், பெரும் ஊழல் நடப்பதால் இந்த நிதி விநியோகிப்பதில் தலைமை பொறுப்பு வகிக்கும் சத்யகோபால் ஐஏஎஸ் பயந்துபோய் உள்ளார். இது ஒரு வழக்காக நாளை மாறக்கூடும் என்பதால் கஜா புயல் நிவாரண பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி அதன் விநியோகத்தை கண்காணிக்க அவர் உத்தரவிட்டுள்ளார் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.