Skip to main content

மார்ச் 29- ஆம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு!

Published on 15/03/2020 | Edited on 15/03/2020

திமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக திமுக பொதுக்குழு மார்ச் 29- ஆம் தேதி கூடுகிறது. 

dmk party meeting to be held on march 29th

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 29- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த மார்ச் 7- ஆம் தேதி தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய பொதுக்குழு கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்