Published on 01/12/2020 | Edited on 01/12/2020
தி.மு.க மாநில இளைஞர் அணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா, தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினரால் கொண்டாடப்பட்டது.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், மாவட்டப் பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'திருச்சி - தஞ்சை' தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேவராயநேரியில் 70 அடி உயரக் கொடிக்கம்பம் அமைத்தார்.
இதனை, திமுகவின் முதன்மைச் செயலாளா் கே.என். நேரு ஏற்றி வைத்தார். மேலும், இந்த விழாவில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரலன், மாவட்டப் பொருளாளர் கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.