Published on 13/08/2018 | Edited on 13/08/2018

கலைஞரின் அனைத்து விசுவாசிகளும் என்பக்கமே உள்ளார்கள், இதற்கு காலம் பதில் சொல்லும் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
எனது தந்தையிடம் என் ஆதங்கத்தை வேண்டிகொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. தலைவர் கலைஞர் அவர்களின் உன்மையான அனைத்து விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் எல்லாம் என் பக்கம் தான் உள்ளனர். என்னை ஆதரித்துக்கொண்டிருக்கின்றனர்.
இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும். என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்புடையது தான். திமுக செயற்குழு கூட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் தற்போது திமுகவில் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.