ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. மூன்று மாநிலங்களில் பாஜக நேரடியாக ஆட்சியை இழந்துள்ளது. இரண்டு மாநிலங்களில் பாஜக இருக்கும் இடமே தெரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் பாஜகவுக்கு ஒரு மரண அடி மக்கள் கொடுத்துள்ளார்கள்.
ஐந்து ஆண்டுகாலம் மோடி அரசு கடைப்பிடித்திருக்கிற மதவெறி அரசியல், விவசாயிகளுக்கு, சிறு தொழில்கள், வியாபாரிகளுக்கு எதிரான கொள்கைகளை கடைபிடித்த காரணத்தினால் பாஜகவுக்கு மிகப்பெரிய தோல்வியை மக்கள் கொடுத்துள்ளனர்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம். நாடு முழுவதும் என்ன நடைபெறப்போகிறது என்பதை இன்றைக்கு அடையாளப்படுத்திருக்கிற தேர்தல் முடிவாக பார்க்கிறோம்.
இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது. மோடி அலை ஓயாது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறாரே?
இதற்கு முன்பு உத்திரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறபோது, அந்த மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றபோது, இது பிரதமருக்கு கிடைத்த வெற்றி, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு செல்வாக்கு இருக்குகிறது என்பதற்கு இதுதான் அடையாளம். எங்களுக்கு எதிராக யாரும் வரமுடியாது என்று இதே தமிழிசை அவர்கள்தான் கூறினார். இவ்வாறு கூறினார்.