Skip to main content

இடமில்லை எனக்கூறி பிரதமரை காக்க வைத்த ஹோட்டல் ஊழியர்!!!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

jacinda ardern stopped at cafe

 

உணவகம் ஒன்றில் உணவருந்த இடமில்லாததால் காத்திருந்து உணவு சாப்பிட்டு சென்றுள்ளார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்.


நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டன், தனது இயல்பான மற்றும் எளிமையான குணத்திற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர். அப்படிப்பட்டவரின்  எளிமையை மீண்டும் உலகுக்கு வெளிகொண்டுவந்துள்ளது வெலிங்டன்னில் நடைபெற்ற சம்பவம் ஒன்று. 

பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனது காதலர் கிளார்க் கேஃபோர்ட் உடன் கடந்த சனிக்கிழமை காலையில் வெலிங்டன்னில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றிற்கு உணவருந்தச் சென்றுள்ளார். அந்நாட்டில் தற்போதுதான் கரோனா பரவல் குறைந்துள்ளது என்பதால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சென்ற உணவகத்தில் குறைவான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போது உணவருந்தச் சென்ற ஜெசிந்தாவை வரவேற்ற உணவக ஊழியர் ஒருவர், குறைவான நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் இடம் அனைத்தும் நிரம்பியுள்ளது. எனவே சிறிது நேரம் காத்திருங்கள் எனக் கூறியுள்ளார்.

 

 


இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தார். பின்னர் இடம் கிடைத்தவுடன், அங்கே பணிபுரிந்த ஊழியர்கள் பிரதமரை உள்ளே அழைத்து அவருக்கு வேண்டிய உணவை கொடுத்துள்ளனர். இந்த செய்தி அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்திய நிலையில், இந்த சம்பவத்தில் தங்கள் மீதுதான் தவறு உள்ளதாக ஜெசிந்தாவின் காதலன் சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னேற்பாடுகள் இல்லாமல், டேபிள் எதுவும் புக் செய்யாமல் நேரடியாக சென்றதால்தான் இது நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும்,  நாட்டின் பிரதமராக இருந்தாலும் சமூக இடைவெளி உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைவருக்கும் பொதுவானதுதான் எனவும், எனவே உணவக ஊழியர்களுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உணவக ஊழியரின் செயலுக்கும், அதற்கு பிரதமர் ஆற்றிய எதிர்வினை குறித்தும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி பேசி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி; கம்பேக் கொடுக்கும் முன்னணி இந்திய பந்துவீச்சாளர்கள் !!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

INDIAN TEAM

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூஸிலாந்தும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த இறுதி போட்டி வரும் 18 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 15 பேர்கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றமில்லை. அதேநேரத்தில் கே.எல் ராகுலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்டில் விளையாடாத பும்ரா, அணிக்கு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் காயம் அடைந்த ஷமி அணிக்கு திரும்பியுள்ளார். 

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு: விராட் கோலி, ரஹானே, ரோகித் ஷர்மா, சுப்மன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விருத்திமான் சஹா, அஸ்வின், ஜடேஜா,பும்ரா, இஷாந்த் சர்மா , முகமது ஷமி, உமேஷ் யாதவ். 

 

 

Next Story

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: பரிசுத்தொகை எவ்வளவு? - ஐசிசி  அறிவிப்பு!

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

VIRAT - WILLAIMSON

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோத உள்ளன. வரும் 18 ஆம் தேதி இந்த இறுதிப் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான பரிசுத்தொகை குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு, டெஸ்ட் மேஸோடு (Championship Mace) 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. போட்டியில் தோற்பவருக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் எனவும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 

ஒருவேளை இறுதிப் போட்டி சமனில் முடிந்தாலோ, டை ஆனாலோ வெல்பவருக்கும், தோல்வியடைபவருக்கும் வழங்கப்பட வேண்டிய பரிசுத்தொகை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் எனவும், டெஸ்ட் மேஸை இரண்டு அணிகளும் பகிர்ந்துகொள்ளும் எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.