உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 490 என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கரோனா வைரஸ்.
உலகம் முழுவதும் 23 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 20,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பெரும்பாலானவை சீனாவுடனான போக்குவரத்து தொடர்புகளை துண்டித்துள்ளன. உலக சுகாதார அமைப்பு அவசரநிலையை அறிவித்துள்ள சூழலில், வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன இந்நிலையில் இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கரோனா காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ள சூழலில், சீனாவின் தொழிற்துறையும் முடங்கியுள்ளது. இதன்காரணமாக கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பங்கு சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.