Published on 05/07/2022 | Edited on 05/07/2022

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கூடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாத்(20). இவர், அய்யர்மலை அரசு கலைக் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை குளித்தலை இரயில் நிலையத்திற்கு வந்த மாணவன் கோபிநாத் வெகுநேரமாக பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்துள்ளார்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத நேரம் திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த சரக்கு ரயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் ரயில்வே போலீசார், சம்பவம் இடத்திற்கு வந்து இறந்த கல்லூரி மாணவனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.