இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேனர் வரவேற்புகள் உட்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதேபோல் இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் பிரபல இசைக்குழுவான லக்ஷ்மன்சுருதி இசைக்குழு நடத்திய இசைக்கச்சேரியை துவக்கிவைக்க மேடைக்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார்'' அழகிய தமிழ் மகள் இவள்'' என்ற எம்.ஜி.ஆர் பாடலை பாடினார். அதனை அடுத்து ''நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கோ'' என்ற பாடலையும் பாடினார்.
அதன்பின் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடகி பி.சுசீலா அவர்கள், தன்னுடனும் ஒரு பாடல் படவேமண்டும் என கேட்க ''ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'' என்ற பாடலை இருவரும் சேர்ந்து பாடினர். அதேபோல் ''பச்சைக்கிளி முத்துச்சரம்'' என்ற எம்.ஜி.ஆர் பாடலையும் சேர்ந்து பாடினர். இறுதியில் பாடகி பி.சுசீலாவின் காலில் விழுந்து ஆசிபெற்ற அமைச்சர் ஜெயக்குமார், தான் பாடிய பாடலுக்கு எம்.ஜி.ஆர் ரசிகர் ஒருவர் தனக்கு 2000 ரூபாய் அன்பளிப்பு கொடுத்ததாக பெருமிதத்துடன்கூறி தன் பாக்கெட்டில் அந்த ரூபாயை வைத்துக்கொண்டார்.