
தமிழகத்தில் 15-ஆவது நாளான இன்றும், 2 ஆயிரத்திற்கும் குறைவாக 1,442 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 11,109 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 392 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 41-ஆவது நாளாக 1,000 -க்கும் குறைவாகக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,14,191 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 61,112 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், இன்று மேலும் 1,494 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,54,826 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று கரோனா உயிரிழப்பு 14 என இருந்த நிலையில், இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 12 பேர் இறந்துள்ளனர். இதனால், ஒரே நாளில் பதிவாகும் கரோனா உயிரிழப்பு ஒற்றை இலக்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 11,681 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,838 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.