Skip to main content

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published on 18/04/2025 | Edited on 18/04/2025

 

threat to Anna University!

சென்னை கிண்டி பகுதியில் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (17-04-25) மின்னஞ்சல் வாயிலாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பது தெரியவந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் போலீசார் சோதனை நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டலை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிய நபர் குறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்