கடலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டமாக கடலூர், கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, மங்களூர், மேல்புவனகிரி, பண்ருட்டி, பரங்கிப்பேட்டை ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடந்தது. அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.
முதல் கட்டமாக நடக்கும் கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 19 பேரும், 33ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 165 பேரும், 51 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 216 பேரும், 435 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 35 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 400 பதவிகளுக்கு 1298பேர் போட்டியிடுகின்றனர்.
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 10 பேரும், 20 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 96 பேரும், 43 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 41 பதவிகளுக்கு 142 பேரும், 342 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 43 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 299 பதவிகளுக்கு 862பேர் போட்டியிடுகின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 3 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 14 பேரும், 29 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 134 பேரும், 51 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 49 பதவிகளுக்கு 225பேரும், 420 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 53 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 367 பதவிகளுக்கு 1135பேர் போட்டியிடுகின்றனர்.
மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில்2 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 11 பேரும், 24 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 107 பேரும், 66 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 61 பதவிகளுக்கு 225பேரும், 456 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 128 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 328 பதவிகளுக்கு 902பேர் போட்டியிடுகின்றனர்.
மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 1 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 7 பேரும், 15 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 79 பேரும், 47 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 45 பதவிகளுக்கு 148பேரும், 342 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 53 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 289 பதவிகளுக்கு 751பேர் போட்டியிடுகின்றனர்.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 3 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 22 பேரும், 25 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 116 பேரும், 42 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 40 பதவிகளுக்கு 140 பேரும்,360 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 40 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 320 பதவிகளுக்கு 891பேர் போட்டியிடுகின்றனர்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில்2 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 12 பேரும், 18 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 194 பேரும், 41 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 38பதவிகளுக்கு 169பேரும், 306கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 55 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 251 பதவிகளுக்கு 698 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் 17 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 95 பேரும், 164 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 791 பேரும், 341 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 16 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 325 பதவிகளுக்கு 1265 பேரும், 2643 கிராம ஊராட்சி வார்டு பதவிகளுக்கு 407 பேர் பேட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 2236பதவிக்கு 6537 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த 7 ஊராட்சி ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. பொதுமக்களும் ஆர்வமுடன் சென்று வாக்களித்தனர். போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்கு போட செல்லும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். மாலை 5 மணியுடன் வாக்கு பதிவு முடிவடைந்தது. சில இடங்களில் 5 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 75 சத வீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் 2ம் கட்ட தேர்தல் மீதம் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரும் 30ம் தேதி நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது.