Skip to main content

"தோல்வி பயத்தில் பாமக, பாஜக, அதிமுக வன்முறையை கட்டவிழ்த்துவிடுகிறது" கும்பகோணத்தில் திருமாவளவன் பேட்டி

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியினரால் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்ட பொன்பரப்பி வாக்கு மையத்தில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கும்பகோணத்தில் வலியுறுத்தியுள்ளார்.

 

thirumavalavan

 

தேர்தலுக்கு பிறகு கும்பகோணம் வந்திருந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம், “தமிழகத்தின் 40 நாடாளுமன்ற மற்றும் இடைத் தேர்தல் நடைபெற்ற அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.
 

தேர்தல் பணிகளில் தி.மு.க.வினர் ஒத்துழைக்கவில்லை என்று எதிர்கட்சியினர்தான் தவறான தகவல்களை சமூக ஊடகங்ளில் பரப்பிவருகின்றனர். தேர்தல் பணிகளில் தி.மு.க.வினர் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.
 

மதவெறி கொண்ட பா.ஜ.க.வும், சாதிவெறி கொண்ட பா.ம.க.வும் இருக்கும் வரை சாதி மோதல்கள் முடிவுக்கு வராது, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, பொன்பரப்பியில் உள்ள வாக்குப் பதிவு மையத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட பா.ம.க.வினர் சுமார் 2 ஆயிரம் வாக்குகளை கள்ள ஓட்டாக பதிவு செய்துள்ளனர். எனவே அந்த வாக்குமையத்திற்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்.
 

அ.தி.மு.க.வினரும், பா.ம.க.வினரும், பா.ஜ.க.வினரும் தோல்வி பயத்தால் இவ்வாறு வன்முறையை நிகழ்த்த துவங்கிவிட்டனர். வன்முறை வெறியாட்டம் குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்க உள்ளோம். மறு தேர்தல் நடத்தவில்லை என்றால், நீதிமன்றத்தை நாட உள்ளோம்" என்றார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்