
தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் நிலையில் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களுக்கு பூத் கமிட்டி கூட்டம் நடத்த இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் உள்ள மைதானத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் இன்று இரவு பார்வையிட்டார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
என்.ஆனந்த் ஆய்வு செய்ய வந்த நேரம் இரவு நேரம் என்பதால், அந்த இடம் எதிரே நிற்கும் ஆள் கூட தெரியாத அளவுக்கு கும் இருட்டாக காட்சி அளித்தது. அப்போது கட்சி தொண்டர்களின் செல்போன் வெளிச்சத்தில் 10 அடி நடந்து ஒரே இடத்தில் நின்று கூட்டம் நடத்தப்படும் இடத்தை 5 நிமிடத்தில் ஆய்வு செய்து சென்றார்.
முன்னதாக என். ஆனந்த் இடத்தை ஆய்வு செய்ய வரும் போது கட்சி தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்கள் யாரும் இருக்க வேண்டாம் எனக் கட்சியினர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.