Skip to main content

இறந்த கோலத்தில் தேர்தல் பிரச்சாரம் – திடுக்கிட்ட மக்கள்!

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் 28 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் பிரதான வேட்பாளர்களை தாண்டி சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். அதில் தமிழ்நாடு மது அருந்துவோர் மற்றும் விழிப்புணர்வு நலச்சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியனும் போட்டியிடுகிறார்.

Election campaign in dead sphere - startled people!


இவர் ஜீலை 30ந் தேதி காலை முதல் வேலூர் மாநகரத்தில் மத்திய பேருந்துநிலையத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்தவர், பிணம் போல் தன்னை மாற்றிக்கொண்டு, கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டார், பேருந்துநிலையத்திற்கு வந்தவர்கள், பேருந்தில் இருந்து இறங்கியவர்கள் திடீரென இதனைப்பார்த்தவர்கள், என்ன இது சாலையோரம் பிணம் என திடுக்கிட்டனர், ஆனால் ஒருவர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் என்கிற தகவலை கேள்விப்பட்டு, அதுக்காக இப்படியா எனச்சொல்லி நகர்ந்து சென்றனர்.

அதே அலங்காரத்தோடு இருசக்கர வாகனத்தில் ஏறி மாநகரை வலம் வந்து துண்டு பிரச்சுரங்களை வழங்கி, தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்கிற நோட்டீஸ்சை வழங்கினார். இந்த வித்தியாசமான பிரச்சாரத்தைப் பார்த்து மக்கள் ரசித்துவிட்டு சென்றனர்.

ஒருப்பக்கம் முதல்வர் எடப்பாடி, திமுக தலைவர் ஸ்டாலின், துணைமுதல்வர் ஓ.பி.எஸ், திமுக இளைஞரணி உதயநிதி, சிபிஎம் பாலகிருஷ்ணன், பாமக அன்புமணி, நாம் தமிழர் கட்சி சீமான் என பல தலைவர்கள் தொகுதிக்குள் வட்டமடித்து பிரச்சாரம் செய்துவரும் நிலையில் மற்றொருபுறம், மக்காபோன், குடுகுடுப்பை, கிளிஜோதிடர் என பல்வேறு கெட்டப்புகளில் வேலூர் தொகுதியில் பிரச்சாரம் களைக்கட்டியுள்ள நிலையில், இதுப்போன்ற அதிரடியான பிரச்சாரமும் தொடங்கியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து இளைஞர் பலி!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
youth passed away after falling into a ditch dug to build a bridge on the road

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சேத்துவண்டை முதல் நெல்லூர் பேட்டை வரை புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே குடியாத்தம் சித்தூர் சாலையில் சித்தூர் கேட் அருகே பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று இரவு சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அர்ஜுன்(30) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்த அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் குடியாத்தம் டூ சித்தூர் சாலையில் தினமும் ஏராளமான கனரகம் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றதால் இந்த அசம்பாவிதம் நடந்ததாகக் கூறி உயிரிழந்த அர்ஜுன் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் சித்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். விபத்துகள் ஏற்படாவதவாறு ஒப்பந்த நிறுவனம் உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அதிகாரிகள் சரியென்ற பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது.

Next Story

‘கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ - வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Vellore Collector warns that action will be taken against sale of illicit liquor

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ள சந்தையில் மது விற்பனை தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 57 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக மாவட்டம் முழுவதும் மற்றும் அணைக்கட்டு, ஒடுக்கத்தூர், பேர்ணாம்பட்டு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தீவிர சாராயத் தேடுதல் வேட்டை  நடைபெற்று வருகிறது. இதில் பேரணாம்பட்டு சாத்கர் மலைப்பகுதியில் வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் நேரடியாக களத்தில் இறங்கி சோதனை மேற்கொண்டு தீவிரம் காட்டி வருகிறார்.

மேலும் மலைப்பகுதியில் ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் கள்ளச்சாராய ஊரல்கள் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் பொருட்களை கண்டுபிடித்து  அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

அப்போது பேசிய ஆட்சியர் சுப்புலெட்சுமி, "வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கும்பொருட்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. அதன்படி மாவட்டத்திலுள்ள 20 உள்வட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் 20 குழுக்களும், மாவட்டத்திலுள்ள 5 மலைக் கிராமங்களுக்கு 1 குழு வீதம் 5 குழுக்களும் என மொத்தம் 25 குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.

மலைக் கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வனத்துறையின் சார்பில் சோதனை சாவடிகளில் கண்காணிப்பினை தீவிரப்படுத்த வேண்டும். காவல்துறையின் சார்பில் வனத்துறையினருக்கு சோதனை சாவடிகளுக்கு தேவையான முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். மேலும் வனத்துறையின் சார்பில் வனப்பகுதிகளில் அவ்வப்பொழுது திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

போதைப் பொருட்களின் விற்பனை கண்டறியப்பட்டால் தொடர்புடைய வணிக நிறுவனம் அல்லது கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்துதுறை அலுவலர்களும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் தங்களுக்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். உத்தரவை பின்பற்றாத அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும், "என எச்சரிக்கை விடுத்தார்.