Skip to main content

’தேர்தல் வேலையை பார்க்க வேண்டாம் என சொன்னார்’ -பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தேமுதிக நிர்வாகிகளின் ஆடியோ பேச்சு 

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

 

    கடந்த 18ம் தேதி பாராளுமன்ற தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேனி பாராளுமன்ற  தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும், அதுபோல் ஆண்டிப்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக லோகிராஜனும், பெரியகுளம் அ.தி.மு.க. வேட்பாளராக மயில்வேலும் போட்டியிட்டனர். இப்படி அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி பொறுப்பாளர்களும் தேர்தல் களத்தில் வேலைபார்ப்பது தான் வழக்கம்.

 

r

 

அதுபோல் தான் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தேனி மாவட்ட தேமுதிகவும் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு தேர்தல் பணியாற்றியிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போதுதான் தேனி மாவட்டத்தில் உள்ள தேமுதிகவைச் சேர்ந்த ஆண்டிப்பட்டி ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளராக கன்னியாபிள்ளை பட்டியைச் சேர்ந்த கார்த்திக்கும், தேனி மாவட்ட தே.மு.தி.க. மாவட்ட மகளிரணி செயலாளரான சந்திராவும் பேசிக் கொள்ளும் ஆடியோ கடந்த சில தினங்களாக வாட்சப், பேஸ்புக் மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

 

c

 

தேனி பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆண்டிப்பட்டி பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் பணியை பற்றி மாவட்ட மகளிரணி செயலாளரான சந்திராவிடம் ஆண்டிப்பட்டி ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திக் கூறி புலம்பி இருக்கிறார். அதற்கு சந்திராவோ... நீ சொல்வது எல்லாமே உண்மை தம்பி. பீல்டு ஒர்க் பண்றவங்களுக்கு மரியாதை கிடையாது. அவர்களுக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கணும்றது நமது கட்சியில் தேனி மாவட்டத்தில் மட்டும் தான் கிடையாது. மற்ற எல்லா மாவட்டத்திலயும் அப்படி கிடையாது.  ஏன் சார் இப்படி பண்றீங்க.  ஏன் எங்களுக்கு எந்த தகவலும் கொடுப்பதில்லை என்று நீ சொன்னது மாதிரியே தான்.  தம்பி கேட்டாலே உடனே அவர்களை ஓரங்கட்டிவிடுங்கள் கிராஸ் கேள்வி கேட்கிறாங்க, எதிர்த்து கேள்வி கேக்குறாங்க .

 

இவங்க கட்சிக்குள்ள எந்த கட்சியிலும், எந்த பொறுப்பிலும் கிடையாது. அவங்களுக்கு வேண்டிய ஆள் எலக்சன் நேரத்தில் வந்து சுத்தி நின்னுக்குறாங்க. நான் மகளிரணியில் 10 வருசமாக தேனி மாவட்டத்தில் இருந்து எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கிறேன். ஒரு கிராமம் போகாத இடம் பாக்கி கிடையாது.  அண்ணியார் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். மகளிரணி நகரம், ஒன்றியம் இன்னும் எல்லா இடத்திலயும் வளர்ச்சி அடையனும்னு அண்ணியார் என்னிடம் ஒப்படைத்துள்ளார்கள். 

 

அந்த பதவியை நான் ஏற்றத்திலிருந்து ஆறு நகரம், எட்டு ஒன்றியம், 22 பேரூர் கழகத்திலும் நான் போகாத ஊர் இல்லை, கால் வைக்காத இடமில்லை. அத்தனை பகுதிக்கும் நிர்வாகிகள் போட்டு கட்சியை வளர்த்துள்ளேன். சொல்லப்போனால் லேடீஸ், பூத் கமிட்டிக்கும் போட்டு எவிடன்ஸ் எல்லாம் இருக்கும். அப்படி இருக்கும்போது மாவட்ட செயலாளர் பீல்டு ஒர்க்கே பண்ணலைனு சொல்லி என்னையே மாற்றுவதற்கு ஏகப்பட்ட இது பண்றாரு. அண்ணியார் கொடைக்கானல் வந்தபோது எனக்கு சொல்லவில்லை. இப்ப தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பொழுதும் மாவட்ட மகளிரணியான எனக்கும் சொல்லவில்லை. 

 

விஜயபிரபாகரன் ஆண்டிப்பட்டி பிரச்சாரத்திற்கு வந்தத சொல்லல. எதுக்குமே சொல்லாம ஓரங்கட்டிட்டு தான் இருந்தார். இதுக்கெல்லாம் பயந்து வெளியேற முடியுமா? கூட்டணினு அறிவித்ததும் இறங்கி வேலை பார்த்தோம். ஆனால் பார்க்ககூடாதுனு சொல்லி ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்தார். நீங்க ஆண்டிப்பட்டில வேலைபார்க்ககூடாது. ஆண்டிப்பட்டி வேட்பளாருக்கு வேலை பார்க்க கூடாது. உங்களை நான் வேலை செய்ய சொன்னேனா அப்படி சொல்லி ஏகப்பட்ட பிரச்சினையெல்லாம் செய்தாரு. அதையும் மீறி நான் கூட்டணி கட்சிக்கு கட்டுப்பட்டு எந்த அளவுக்கு பீல்டு ஒர்க் பண்ணனுமோ அந்த அளவுக்கு பண்ணிக் கொடுத்தேன். இவர் சொல்றார் என்பதற்காக அண்ணியாருக்கு துரோகம் பண்ண முடியாது. கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு எந்த அளவுக்கு பீல்டு ஒர்க் பண்ணனுமோ செய்தென். இவர் சொல்றார் அப்டிங்கறதுக்காக அண்ணியாருக்கு துரோகம் பண்ண முடியாது. நம்ம பீல்டுஒர்க் தான பண்றோம். உனக்கு மட்டும் இல்லப்பா மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் எவ்வளவோ டார்ச்சர் செய்தாரு கிருஷ்ணமூர்த்தி சரியா? 

 

k


நாங்க எல்லாம் வெளியே சொல்லமாட்டாம அப்டியே சொல்லப்போனா மாவட்ட மகளிரணிதான் பேர். எந்த அளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ படுத்தி நாங்களே வெளியேறனும்னு அவர் எவ்வளவோ செஞ்சாரு. அதை செவி கொடுக்காமல்  துடைத்துப் போட்டுட்டுத்தான் உட்கார்ந்து இருக்கோம். நல்ல நேரம் வரும், நல்லகாலம் பிறக்கும், நீ கொஞ்சம் தைரியமா இரு, உழைத்தவர்கள் வீண் போகமாட்டோம். அக்காவா சொல்றேன் தயவுசெய்து வெளியேற வேண்டாம். 


அதைத் தொடர்ந்து கார்த்திக் பேசும்போது... மாவட்ட செயலாளருக்கும், ஒன்றிய செயலாளருக்கும் பணம் போயிருக்காதா? நீங்களும் மாவட்ட பொறுப்பில் இருக்கிறீர்கள் உங்களுக்கு தெரியாதா? அவங்களுடைய ரிலேடிவ், கூட இருக்குறவங்களுக்கு பணம் செட்டில் பண்ணிட்டாங்க. எலக்சன்ல இருந்து இன்றைக்கு வரைக்கும் ஒன்றியத்திற்கும், மாவட்ட செயலாளருக்கும் தொடர்ந்து போன் போடுறேன்....எடுக்கல.  திரும்ப கூப்பிடவும் இல்லை. அவங்க சொந்தகாரங்களே கூப்பிட்டு போனவங்க பத்து பேருக்கு கூட சுத்துனாங்க.  அந்த சொந்தகாரங்க பத்து பேர் ஷேர் பண்ணிக்கிட்டாங்க. இவங்க குடுக்குற பணத்தை வைத்து நம்ப குடும்பம் நடத்தலக்கா. அத வச்சு நம்ம தலைவர் சொல்லிட்டார்னு அதை வச்சு நம்ம வேலை பார்க்கிறோம். இந்தமாதிரி ஆட்களை களையெடுத்தால் தான் தேனி மாவட்டத்தில் கட்சி நல்ல டெவலப் ஆகும். இல்லைன்னா அத நான் வாயில் சொல்லக்கூடாதுக்கா... உங்களுக்கு தெரியாதது ஒன்னுல்லை. 


எல்லா சைடும் பிரச்சனை பெரியகுளத்திலும் பிரச்சனை. இந்த மாவட்டம் இருக்கும் வரை ரொம்ப மோசம்தான்கா. இவங்க பண்றதபார்த்தா தேனி மாவட்டத்தில் நம்ம கட்சி ஒரு ஜாதி கட்சி ரேஞ்சுக்கு வந்துட்டு இருக்கு. அது வருத்தமாக இருக்கு.  நான் திருப்பூரில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நான் கவர்ன்மெண்ட் வேலைல இருக்கேன். இருந்தாலும் லீவ் போட்டு வந்து வேட்பாளர் வர்றார்னு ஆட்களை கூப்பிட்டு வந்தேன்.  ஆனால் குறைவான காசு கொடுத்தனர்.

 

தெற்கு ஒன்றியத்தில் இருந்தீர்கள். இப்பொழு வடக்கு ஒன்றியத்தில் இருக்கீங்க எனக்கு தெரியாதுனு சொல்லிட்டாங்க. விஜயபிரபாகரன் வந்தப்பா பத்து பேரை கூப்பிட்டு வந்தேன். அதற்கும் காசு இல்லைனு சொல்லிட்டாங்க. அவர்கள் எல்லோரும் பணத்துக்கு அடிமையாகிவிட்டார்கள். இவங்கள மாதிரி ஆள் இருக்குற வரைக்கும் தேனி மாவட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளராது இவங்களும் வளர விடமாட்டாங்க. உங்க சுயநலத்திற்காக அவங்க என்னா சொன்னாலும் தலையாட்டுதவற்கு ஒன்றியம் ஆனாலும், மாவட்டம் ஆனாலும் பத்து பேரை வச்சுக்கிறாங்க கையில். நம்ம ஒருத்தர் சொல்றதை கேட்பாங்களா? பத்து பேர் சொல்றத கேட்பாங்களா இந்த நிலைமை மாற தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஜாதி கட்சி என அரசியல் சாயம் பூசி விடுவார்கள்.   அதற்கு நாம், தலைமையிலோ அல்லது உங்கள மாதிரி மாவட்ட நிர்வாகி நடவடிக்கை  எடுக்கனும்க்கா.

 

அதைத் தொடர்ந்து சந்திரவோ... தம்பி நீ சொல்றது எல்லாம் உண்மை . ஒன்றிய செயலாளரை நாம் குறை சொல்ல முடியாது. ஏன் அப்படி சொல்றேன்னா தேனி மாவட்ட செயலாளர் தேர்தல் அறிவித்த உடனே கூட்டம் போட்டு வேட்பாளரை நமக்கு அறிமுகப்படுத்தல.  அதுபோல ஒன்றிய, நகரங்களில் கூட்டம் போட்ட வேட்பாளரை அறிமுகப்படுத்தியது கிடையாது. ஊழியர் கூட்டமும் போடவில்லை. எந்த ஒரு செயலையும் மாவட்ட செயலாளர் செய்யவில்லை. நம்ம நிர்வாகிகளே போன் போட்டு என்னங்க வேட்பாளரை அறிமுகப்படுத்தவில்லை . கூட்டம் போடலைனு கேட்டால் கூப்பிடாத வரை நல்லதுன்னு இருங்க. எதுக்கு வேலை செய்றீங்க நான் சொல்றப்ப வேல பாருங்கனு சொல்றாங்க. லோக்கல்ல இருந்துக்கிட்டு  வேலை பார்க்க முடியுமா இருக்க முடியாதுலைனு கேட்டா என்றைக்கு சொல்றனோ அன்னைக்கு வேலைபாருங்கன்னு.  வேலை பார்க்க கூடாதுன்னுதான் உத்தரவு வந்ததே தவிர அண்ணியார் சொன்னது போல கூட்டணிக்கு கட்டுப்பட்டு  வேலை பாருங்கனு சொன்னார். 


பொறுப்புனு வந்தா தேமுதிகவினர் காசுக்கு அடிபணியாமல்  வேலை பார்ப்பங்கன்னு எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆண்டிப்பட்டி பொறுப்பாளராக மாவட்ட துணைச் செயலாளர் ராமராஜை தலைமை அறிவித்திருந்தது. ஆனால் தனக்கு வேண்டப்பட்ட சுரபி பாண்டியனை பொறுப்பாளராக போட்டார். அது எப்படி போட்டீங்கன்னு கேட்டதற்கு அப்படித்தான் போடுவோம் என அராஜகமாக பதில் சொன்னார். வேட்பாளரை பார்க்க கூடாது, இறங்கிப் போய் தேர்தல் வேலை பார்க்ககூடாதுனு தான் சொன்னார். அதையும் மீறி வேலை பார்த்தோம். விஜயபிரபா தம்பி ஆண்டிப்பட்டிக்கு வந்தப்ப கூட ஒரு வண்டிக்கு நாலு பேரை கூட்டிட்டு வந்தா போதும் என நம்ம தலைவர் வந்ததுக்கே கூட்டம் சேக்கக்கூடாதுனு காச மிச்சம் பண்ண பார்த்தார். இந்த விசயம் எல்லாம் ஒட்டுமொத்தமாக நகரம், ஒன்றியம் மூலம் தலைமைக்கு புகார் அனுப்பி இருக்கிறார்கள். அதன்மூலம் கூடிய விரைவில் விடிவு காலம் பிறக்கும் என்று பரபரப்பாக ஆடியோவில் பேசப்பட்டும் இருக்கிறது.


இப்படி மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திராவும், ஆண்டிப்பட்டி ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளரான கார்த்திக்கும் பேசிய ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது!
 

சார்ந்த செய்திகள்