Published on 12/09/2018 | Edited on 12/09/2018

மனோபாலா தயாரிப்பில் சதுரங்கவேட்டை-2 படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடித்துள்ளார்.
சதுரங்க வேட்டை-2 படத்துக்கான சம்பள பாக்கியான ரூபாய் 1.79 கோடிகேட்டு நடிகர் அரவிந்த்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சம்பள பாக்கி வழங்கும் வரை திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கவும் அரவிந்த் சாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், படத்தின் தயாரிப்பாளர் மனோபாலா செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.