Published on 20/04/2025 | Edited on 20/04/2025

சென்னை ஆலந்தூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு இலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் இலவச தலைக்கவசத்தை வழங்கினார்.
ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் வடக்கு பகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாலையில் தலைக்கவசம் இல்லாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் இலவச தலை கவசங்களை வழங்கினார். இதையறிந்து அந்த பகுதியில் அதிகப்படியான வாகன ஓட்டிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.