திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது இந்த கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமை தாங்கினார். நகரசெயலாளர்கள் தண்டபாணி, சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ தேன்மொழியோ... திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த எம்.பி. தேர்தல்ல நாங்க அஞ்சு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிச்சுட்டோம்னு திமுக காரங்க சொல்றாங்க, ஆனா அவங்களால நிலக்கோட்டைல ஜெயிக்க முடியல. 21 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் நான்தான் ஜெயிச்சேன். அதனால என்னைக்குமே நிலக்கோட்டை அதிமுக கோட்டை இப்படி இருக்கும்போது வரப்போற "உள்ளாட்சித் தேர்தலில் அவன் சொன்னான் இவன் சொன்னானு ஒருத்தருக்கு ஒருத்தர் கட்சிக்குள்ளேயே போட்டி போட்டுக்கிட்டு தேர்தல்ல நின்னைங்கனா இடையில புகுந்து திமுககாரன் ஜெயிச்சுட்டு போயிருவான்" அதனால அதிமுககாரங்க அல்லா பேரும் ஒத்துமையா இருந்து உள்ளாட்சித் தேர்தலை எல்லா பொறுப்புக்களையும் நம்ம ஜெயிக்கணும் அதுக்காக எல்லாம் கடுமையா பாடுபடுங்கனு நான் கேட்டுக்குறேன் என்று கூறினார்.
அதை கேட்டு கூட்டத்திற்கு வந்த கட்சி பொறுப்பாளர்கள் எல்லாம் பரவால்ல அக்கா நல்லாதான் கட்சி காரங்களை உசுப்பி விடுகிறார்கள் என சொல்லி கொண்டே கலைந்து சென்றனர். இப்படி பெண் எம்எல்ஏ தேன்மொழி திமுகவுக்கு சவால் விடுவது போல் பேசியதைக் கண்டு அதிமுகவினரே அதிர்ச்சியடைந்து விட்டனர்.