திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள வடகரை கிராமத்தில் அரசின் டாஸ்மாக் மதுக்கடை உள்ளன. இந்த கடையில் இன்று காலை 9 மணிக்கே டோக்கன் வழங்கப்பட்டு பின்னர் வரிசையாக மது வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மதியம் 3 மணிக்கெல்லாம் கடையில் இருந்த அனைத்து சரக்குகளும் காலியாகியுள்ளன.
சரக்குகள் காலியான விவரத்தை டோக்கன் பெற்று 2 கி.மீ தூரத்துக்கு வரிசையில் நின்றுயிருந்த குடி மகன்களிடம் போலீஸார் மைக்கில் அறிவித்து கலைந்து போகச்சொல்ல அதிர்ச்சியடைந்து விட்டனர். சரக்கு காலியாகுதுன்னு தெரியுதுல்ல அப்பறம் எதுக்கு எங்களுக்கு டோக்கன் தந்து வரிசையில் நிற்க விடனும், சரக்கு காலியாகுதுன்னா வரவச்சியிருக்கனும்மில்லை, என் வரவைக்கல என குரல் கொடுத்தனர். காவல்துறையினர் எ ச்சரித்ததும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு இல்லை காலி எனச்சொன்னால் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு செல்லும் இதே குடி மகன்கள், மதுபானம் காலி என்றதும் கொதித்துப்போய் குரல் கொடுத்துள்ளார்கள்.