Published on 28/01/2022 | Edited on 28/01/2022

கடலில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் காணாமல் போன நிலையில் அவர்களை கண்டுபிடிக்க தீவிரமாக தேடப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் மணல்குடியிலிருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்கள் தாவீது, அருள்தாஸ், அலெக்சாண்டர் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் தற்போதுவரை கரை திரும்பாததால் சக மீனவர்கள் கடலில் 3 மீனவர்களையும் தேடி வருகின்றனர். மீனவர்கள் மூவர் காணாமல் போன சம்பவம் கன்னியாகுமரி மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.