
அதிமுக நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்புசாமி பாண்டியன் இன்று (26-03-25) காலை திடீரென்று காலமானார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்புசாமி, அதிமுக சார்பில் கடந்த 1970 மற்றும் 1980 தேர்தல்களில் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகளில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து விலகிய கருப்புசாமி, திமுகவில் இணைந்து 2000இல் சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பின்னர், அவர் கடந்த 2016ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா இருந்தபோது, கருப்புசாமி பாண்டியன் அமைப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். அதன் பின்னர், கட்சி இரண்டாக பிரிந்த பின்பு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் கடந்த 2020இல் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் அமைப்பு செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கருப்புசாமி பாண்டியன், உடல்நலக்குறைவு காரணமாக நெல்லையில் இன்று காலை உயிரிழந்தார்.