Skip to main content

அடி மேல் அடி வாங்கும் நீரவ் மோடி...

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய உறவினர் மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடி கடன் பெற்று மோசடி செய்து, இந்தியாவை விட்டு வெளியேறினர். இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்துவரும் அவரை இந்தியா கொண்டுவருவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நீரவ் மோடி கடந்த மாதம் லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

 

nirav modi bail plea dismissed by westminister court

 

 

இதனை அத்தொடர்ந்து அவர் ஜாமீனுக்கு விண்ணப்பித்தார். முதல் முறை அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு முறையிட்டார். அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையும் ஜாமீன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு சொந்தமான 10 சொகுசு கார்களும் இன்று ஏலம் விடப்பட்டுள்ளது. 10 கார்களும் 3.30 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஜாமீன் மறுப்பு, சொத்துக்கள் ஏலம் என நீரவ் மோடிக்கு தொடர் அடிகள் விழுந்து வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்