கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இன்று (23/04/2020) காலை 09.00 மணி நிலவரப்படி 21,797 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. மேலும் 4,85,172 பேரிடமிருந்து 5,00,542 மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.
இதனிடையே மும்பையில் பிளாஸ்மா தெரபி மூலம் கரோனாவுக்கு சிகிச்சைத் தர மகாராஷ்டிரா அரசுக்கு ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.