மக்களவையில் ஒரு நாளில், ஒரு உறுப்பினருக்கு 10 கேள்விகள் வரை எழுப்ப அனுமதி உள்ளது. இதனால் மக்களவையில் நாளொன்றுக்கு 230 கேள்விகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதனால் மக்களவை அலுவல்கள் பாதிக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளனர்.
இதை கருத்திற்கொண்டு மக்களவை உறுப்பினர்கள் இனிமேல் நாளொன்றுக்கு 5 கேள்விகள் மட்டுமே எழுப்ப அனுமதி என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து கேள்விகளுக்குமேல் நோட்டீஸ் வழங்கினால் அது அடுத்த நாள் அலுவலில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், இந்த புதிய மாற்றம் வருகின்ற மழைக்கால கூட்டத்தொடரில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர். இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மக்களவை செயலாளர் சிநேகலதா ஸ்ரீவஸ்தவா வெளியிட்டார்.
ஜூலை 18 ஆம் தேதியில் இருந்து மக்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இது பிரதமர் மோடி ஆட்சிக்காலத்தின் கடைசி மழைக்கால கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.