Published on 27/07/2020 | Edited on 27/07/2020

இந்தியாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மும்பை, கொல்கத்தா மற்றும் நொய்டாவில் அதிக திறன் கொண்ட கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் திறக்கப்பட்டது. இந்த ஆய்வகங்கள் மூலம் நாளொன்றுக்கு 10 ஆயிரம் கரோனா மாதிரிகளைப் பரிசோதிக்க முடியும். பிரதமர் மோடி அதிகத் திறன் கொண்ட இந்தக் கரோனா பரிசோதனை ஆய்வகங்களைக் காணொளி மூலம் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நாடு முழுவதும் கரோனா சிகிச்சைக்காக 11 லட்சம் படுக்கைகள் உள்ளன. தினமும் 3 லட்சம் என்-95 முகக் கவசங்களை இந்தியா உற்பத்தி செய்து வருகிறது. கவச உடை உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது என்றார்.