Skip to main content

12 வயதுக்கும் மேற்பட்டோருக்கான புதிய கரோனா தடுப்பூசி - சில நாட்களில் அனுமதியளிக்கவுள்ள இந்தியா!

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

zydus cadila

 

இந்தியாவில் இதுவரை கோவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக் v, மாடெர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஸைடஸ் காடிலா நிறுவனம், தான் உருவாகியுள்ள ‘ஸைகோவி-டி’ என்ற தடுப்பூசிக்கு அனுமதி கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்திருந்தது.

 

இந்தநிலையில், ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்க மேலும் சில நாட்கள் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸைகோவி-டி தடுப்பூசியைக் கொண்டு மூன்றுகட்ட சோதனைகளை நடத்தி முடித்துள்ள ஸைடஸ் காடிலா நிறுவனம், தங்களது தடுப்பூசி 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டோருக்குப் பாதுகாப்பானது என ஏற்கனவே கூறியுள்ளது. மேலும் மூன்றாவது கட்ட ஆய்வின் இடைக்கால தரவுகளின்படி, தங்கள் தடுப்பூசிக்கு 66.6% சதவீத செயல்திறன் இருப்பதாகவும் ஸைடஸ் காடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் இந்த ஸைகோவி-டி தடுப்பூசி, மொத்தம் மூன்று டோஸ்களைக் கொண்டதாகும். முதல் டோஸ் செலுத்தப்பட்ட 28வது நாளில் இரண்டாவது டோஸையும், 56வது நாளில் மூன்றாவது டோஸையும் செலுத்திக்கொள்ளலாம். டி.என்.ஏ பிளாஸ்மிட்டைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உலகின் முதல் கரோனா தடுப்பூசி இதுவென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்