Skip to main content

ஐந்து பேர் பலி; கரோனா தடுப்பூசி நிறுவன விபத்துக்கு காரணம் என்ன? - புனே மேயர் தகவல்!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

serum institute

 

 

இந்தியாவில் அனுமதியளிக்கப்பட்ட ‘கோவிஷீல்ட்’ எனும் கரோனா தடுப்பூசியை, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

இந்நிலையில், சீரம் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சீரம் நிறுவனத்துக்கு 10 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

 

இந்த தீ விபத்தில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தில் நடைபெற்ற வெல்டிங் பணியின்போது இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக புனே மேயர் முர்லிதர் மோஹல் தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; பிரதமர் நிவாரணம்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
A terrible fire at a firecracker factory in madhya pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தா நகரில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று (06-02-24) திடீரென்று பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது. இந்த தீ விபத்தால், ஆலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின. இந்த பயங்கர விபத்தில் பலரும் சிக்கிப் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், பலமணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர். இதனையடுத்து, விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேர் படுகாயமடைந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விபத்து தொடர்பாகப் பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் பலரும் வேதனை அடைந்துள்ளனர். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் உதவி வருகிறது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
fire incident in a chemical warehouse at chennai

சென்னையை அடுத்துள்ள புழல் - அம்பத்தூர் சாலையில் உள்ள சூரப்பட்டு என்ற இடத்தில் பல்லாவரத்தைச் சேர்ந்த அனந்த ராமகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான ரசாயன குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் நள்ளிரவு 12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து புழல் காவல் துறையினருக்கும், செங்குன்றம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ளே வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள், உடை மற்றும் வாகன டயர்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின. தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாகத்  தீ பற்றி எரிந்து வருகிறது.

இருப்பினும் தீ மளமளவென எரிந்ததால் தீயைக் கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமமாக இருந்ததால் கூடுதலாக அம்பத்தூர், ஆவடி, கொளத்தூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.