Skip to main content

85 வயது தாயாரை அடித்தே கொன்ற மகன்; போலீஸ் தீவிர விசாரணை

Published on 22/05/2025 | Edited on 22/05/2025

 

drunken Son beats 85-year-old mother to thrash in kerala

குடிபோதையில் 85 வயது தாயாரை அடித்தே மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஓமனா (85). இவரது மகன் மணிகண்டன். மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று, குடிபோதையில் இருந்த மணிகண்டன், தனது தாயாரை கொடூரமாக அடித்துள்ளார். பல முறை தாக்கியதில், ஓமனாவுக்கு பலத்த காயமடைந்தது. 

உயிருக்கு ஆபத்தான நிலையில், ஓமனா சிகிச்சைக்காக அரசு மருத்திவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஓமனா, சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மணிகண்டனை பிடித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் என்பது குறித்து இதுவரை தெரியாததால், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்