Skip to main content

விளை நிலத்தை தொட்டால் வெட்டி புதைப்பேன்! -சேலத்தில் சீமான் ஆவேசம்!

Published on 13/05/2018 | Edited on 13/05/2018
seeman-sattur

 

 


முதல்வர் என்பவர் உள்ளூர் புரோக்கர். பிரதமர் என்பவர் இன்டர்நேஷனல் புரோக்கர். எந்த நாடு சந்தைப்பொருளாதாரத்தை நம்புகிறதோ அந்த நாட்டின் தலைவன், தரகராகத்தான் இருக்க முடியுமே தவிர, மக்களுக்கான தலைவனாக இருக்க முடியாது. விமான நிலையம் விரிவாக்கத்திற்காக விளை நிலத்தைத் தொட்டால் வெட்டிப் புதைப்பேன் என்று சேலத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகக் கூறினார்.

seeman-sattur


 

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் அழைப்பின்பேரில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (மே 12, 2018) சேலம் வந்திருந்தார். ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த கன்னங்குறிச்சி மூக்கனேரியை, பியூஷ் மானுஷ் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து சீரமைத்து, பொலிவுறு ஏரியாக மாற்றினர்.
 

ஏரியின் அழகை, சீமான் பரிசலில் சென்று கண்டு ரசித்தார். பின்னர் ஏரிக்கரையில் மரக்கன்றுகளை நட்டார். அதையடுத்து, சேலத்தில் கிடப்பில் போடப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான இடத்தை நேரில் பார்வையிட்டார்.

 

seeman-sattur


 

 

சேலம் விமான நிலையத்திற்காக நிலம் கொடுத்த விவசாயி கந்தசாமி சில நாள்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவருடைய வீட்டிற்கு நேரில் சென்ற சீமான், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் எருமாபாளையம் மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
 

இதையடுத்து, சட்டூர் கிராமத்தில் விமான நிலைய விரிவாக்க எதிர்ப்பு இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.
 

அப்போது அவர் பேசியது:
 

''உலகில் மூத்த இனம், தமிழ் இனம். தெற்காசியா வரை பரவியிருந்த இனம் நம் இனம். இந்த இனத்தை திட்டமிட்டு வஞ்சகத்தால் வீழ்த்திவிட்டனர். தமிழ் படித்தால் வேலையில்லை என்று கூறி பள்ளியில் இருந்தும், வழக்காடு மன்றத்தில் இருந்தும், கலாச்சாரத்தில் இருந்தும், வழிபாட்டு முறையில் இருந்தும் நம் மொழியை, நம் இனத்தை அழிக்கும் வேலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

 

seeman-sattur


 

இப்போது விளை நிலத்தை கையகப்படுத்துகிறோம் என்ற பெயரில் நம்மை நம் நிலத்தை விட்டு வெளியேற்றும் வேலைகளைச் செய்கின்றனர். 100 நாள் வேலை திட்டம் என்ற பெயரில் விவசாயத்தை ஒழித்துவிட்டனர். விவசாயத்திற்கு ஆள் கிடைக்காமல் விளை நிலங்களை விற்றுவிடும் நிலை உள்ளது. விவசாயிகள் தற்கொலை என்பது நாமெல்லாம் சோறின்றி சாகப்போகிறோம் என்பதற்கான எச்சரிக்கை என்பதை உணர வேண்டும்.
 

நாம் கேட்டது காவிரியில் இருந்து தண்ணீர். இவர்கள் தருவது ஏர்போர்ட்டா? இதை யார் கேட்பது? ஏற்கனவே சேலம் ஏர்போர்ட் 170 ஏக்கரில் உள்ளது. அதில் ஒரே ஒரு பிளைட் வந்து செல்லும்போது, இப்போது 570 ஏக்கர் நிலத்தில் விரிவாக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? யாருடைய தேவைக்காக இந்த நடவடிக்கை? இதற்கெல்லாம் அரசிடம் பதில் இல்லை.

 

seeman-sattur


 

 

 

விமான நிலையம் விரிவாக்கத்திற்காக விளை நிலத்தை தொட்டால், தொட்டவனை வெட்டிப் புதைக்கிறது தவிர எனக்கு வேறு வழியில்லை. நீ வானூர்தியில் போகும்போது பசி எடுத்தால், தாகம் எடுத்தால் எதை தின்பாய்? எதை குடிப்பாய்? அவை எல்லாமே இந்த பூமியில் விளைவதுதானே?
 

அப்படியே விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தே தீர வேண்டும் என்றால், சேலத்தில் சும்மா 10 ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறது. அங்கே போய் திட்டத்தை செயல்படுத்துங்கள். எங்கள் விளை நிலத்தை பறித்துக்கொண்டு இழப்பீடு தருவதற்கு நீ யார்?
 

விமான நிலையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களை சுற்றிப்பார்த்தேன். எங்கு பார்த்தாலும் கத்தரி, வெண்டை என காய்கறிகள் விளைகிறது. அத்தனையும் பொன் விளையும் பூமி. இந்த நிலத்தைப் பறித்துக்கொண்டு, தமிழர்களை சொந்த நிலத்தில் அகதிகளாக்க வேண்டும் என்பதுதான் அரசின் திட்டமா?

 

seeman-sattur


 

எந்தக் காரணம் கொண்டும் தாய் நிலத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று இன்றே, இப்போதே நீங்கள் சத்தியம் செய்து கொள்ள வேண்டும். இதுவும் ஒரு போர்தான். முன்பு பகை நாட்டினர்தான் போரிட்டு நிலத்தை ஆக்கிரமிப்பார்கள். இப்போது நமது அரசாங்கம் நம்மிடமே போரிட்டு நிலத்தை பறிக்க நினைக்கிறது.
 

சேலத்தில் இருந்து சென்னைக்கு 8 வழிச்சாலை எதற்குப் போட வேண்டும்? யாருக்காக இந்த வசதி? இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம் அல்ல. அதானி, அம்பானிகளுக்கான அரசாங்கம். நான்கு வழிச்சாலையை போட்டது இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை. ஆனால் அதில் சுங்கம் வசூலிக்கும் உரிமையை தனியாருக்கு விட்டுவிட்டனர்.
 

இன்று ரோட்டை விற்றவர்கள் நாளை நாட்டையே விற்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? முதல்வர் என்பவர் உள்ளூர் புரோக்கர். பிரதமர் என்பவர் இன்டர்நேஷனல் புரோக்கர். எந்த நாடு சந்தைப்பொருளாதாரத்தை நம்புகிறதோ அந்த நாட்டின் தலைவன், தரகராகத்தான் இருக்க முடியுமே தவிர, மக்களுக்கான தலைவனாக இருக்க முடியாது.

 

seeman-sattur


 

எட்டு மலைகளைக் குடைந்து, லட்சக்கணக்கான மரங்களை அழித்து எட்டு வழிச்சாலை அவசியமா? என்பதை உணர வேண்டும். வனத்தை அழித்தால் அருவி அழியும். அருவி இல்லாவிட்டால் ஆறு இருக்காது. ஆறு இல்லாவிட்டால் தண்ணீர் இருக்காது. தண்ணீர் இல்லாவிட்டால் உயிர்கள் இருக்காது. உயிர்கள் இல்லாவிட்டால் இந்த பூமியே இருக்காது.
 

காடு, மலை என இயற்கையை அழிக்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முச்சந்தியில் நிற்க வைத்து விளக்குமாற்றாலேயே அடித்து, அவர்கள் மீது சாணியைக் கரைத்து ஊற்ற வேண்டும்.
 

இந்த உலகத்தில் நாம் வாடகைக்குதான் இருக்கிறோம். அதை அப்படியே பத்திரமாக அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிட்டுப் போக வேண்டும்''. இவ்வாறு சீமான் பேசினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்