Skip to main content

பஜாரி சுந்தரவள்ளி என்பது ஓல்டு... புதுசா ட்ரை பண்ணுங்க -பேராசிரியர் சுந்தரவள்ளி அல்டிமேட்!

Published on 09/11/2020 | Edited on 09/11/2020
kl;

 

 

மனுநீதி தொடர்பாக சர்ச்சையை எழுந்த நிலையில், இதுதொடர்பாக பாஜகவினர் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இதனை எதிர்த்தும் மனுநீதியை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பேராசிரியர் சுந்தரவள்ளி பாஜகவினரை கடுமையாக தாக்கி பேசினார். அவரின் பேச்சு வருமாறு, "கோயில்களில் ஆடு மாடுகளைத்தான் பலி இடுவார்கள், சிங்கங்களை ஒரு போதும் பலியிட மாட்டார்கள் என்று கூறிய அம்பேத்கர் அவர்களையும், பெண் விடுதலை இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்று கூறிய பெரியார் அவர்களையும் வணங்கி நான் என்னுடைய கருத்துகளை எடுத்து வைக்க கடமைப்பட்டுள்ளேன். கடந்த 10 நாட்களாக அண்ணன் திருமா அவர்களின் பேச்சை தொடர்ந்து கேட்டு வருகிறோம். தமிழனுக்கு எதிராக பேசினால் தமிழகம் கந்தக பூமியாக வெடிக்கும் என்பதை நாம் இந்த நாட்களில் தொடர்ந்து பார்த்து வருகிறோம். சிறுத்தைகள் அரசியல் கட்சியாக இருப்பதால் பம்பி அடக்கமாக இருப்பார்கள், சச்சரவுகளில் சிக்க விரும்ப மாட்டார்கள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் வாக்குகளை விட சமூக நீதியே முக்கியம் என்று இன்றைக்கு நாம் அரசியலில் களமாடி வருகிறோம். மண்ணின் விடுதலையும், மக்களும் தான் முக்கியம் என்பதை இன்றைக்கு அண்ணன் திருமா உறுதி செய்து காட்டியுள்ளார். அவரின் அந்த உறுதியை பிடித்துக்கொண்டு நாமும் பின்தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். 

 

இன்றைக்கு சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வர விரும்புகிறார்கள். அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை, பெண்களும் அரசியலுக்கு வரட்டும். வரவேற்று அக மகிழ்கிறோம். அந்த துறையில் இருந்து அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்து சாதித்தவர்கள் இன்றைக்கு ஏராளம். குஷ்பு, காயத்ரி முதலியவர்களையும் நாம் அரசியல் படுத்த வேண்டிய அவசியம் நமக்கு இருகிறது தோழர்களே. மிஸ்டர் திருவமாவளவன் என்று சொல்லும் அவர்கள் அரசியல் செய்ய நாம் வாய்ப்புக்களை ஏற்படுத்தி தர வேண்டும். அநாகரிகமான அரசியல் செய்வது என்பது பெரிய கடினமான காரியம் இல்லை. எனவே அதற்கெல்லாம் நாம் வாய்ப்பு சிறிதும் கொடுத்து நம் தரத்தை குறைத்துக்கொள்ளக்கூடாது. அந்த குரூப்பில் உள்ள சரஸ்வதி என்ற ஒரு அக்கா என்னை கழுவி கழுவி ஊத்துகிறார். ஆனா பாவம், அந்த அக்காவுக்கு நாலு வரி சேர்த்து தொடர்ச்சியாக பேச தெரியாது. பாஜாரி சுந்தரவள்ளி என்று ஓங்கி கத்துகிறார்கள். நான் கூட அது ரொம் ஓல்டு, புதுசா எதாவது போடுங்கள் என்று சொல்லலாம் என்று பார்த்தேன். பிறகு அவரின் கருத்துக்கு கீழே ஐ லவ் யூ சரஸ்வதி அக்கா என்று கமெண்ட் செய்தான். ஏன் அவங்களை திட்டி அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று புதிய ஆயுதத்தை தற்போது கையில் எடுத்துள்ளேன். 

 

பெண்கள் அரசியலுக்கு வரட்டும், வந்து பேசட்டும், ஆனால் அவர்களை அரசியல் படுத்தும் வேலைகளை நாம் தொடர்ந்து செய்வோம். அதுதானே நம் வேலையும் கூட. தமிழ்நாட்டில் காது வழியாக நிறைய பேருக்கு மூளை வளருகிறது. அதனால் மாமியார் கூட மருமகள் சென்றால் கூட அவர் கூட  இவர் ஏன் செல்கிறார் என்று கேள்வி எழுப்புகிறார்கள் சிலர். மாமியார் கூட மருமகள் செல்லாமல் வேறு யார் கூடே செல்வார்கள் என்று தெரியவில்லை. சொன்னால் நாங்களும் கூட தெரிந்து கொள்வோம்.  ரங்கராஜ் என்னசொல்கிறார் என்றால், மனுநீதி வேறு, சனாதனம் வேறு என்று முட்டுகொடுக்கிறார். அவருக்கு அவருடைய பாணியிலேயே பதில் சொல்ல விரும்புகிறேன். சனாதனம் மனித குல விரோதம் என்று அவருக்கு மிக நெருங்கிய பார்ப்பண குலத்தில் பிறந்து பொது நெறியில் வளர்ந்த பரிதிமாற் கலைஞர் கூறியதை நினைவுப்படுத்துகிறேன். எனவே எங்களிடம் உங்கள் பாச்சா பலிக்காது. எனவே எங்களிடம் வாலை ஆட்டாதீர்கள்" என்றார்