
தனது கணவரான லிங்கேஷ்வர திலகனை சில தினங்களுக்கு முன்பாக விவாகரத்து செய்த அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா, டெல்லியில் வசிக்கும் வக்கீல் ராமசாமியை இன்று 26ம் தேதி மறுமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், " 2014ல் தனக்கு திருமணம் நடந்ததை ஏமாற்றி, சசிகலா புஷ்பாவை மறுமணம் செய்ய ராமசாமி முயற்சிப்பதாக கூறி மதுரை, வில்லாபுரம் மணிகண்டன் நகரை சேர்ந்த சத்தியபிரியா மதுரை கலெக்டரிடம் புகார் கொடுக்க, அவரோ., இது தொடர்பாக விசாரிக்குமாறு போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார்.
இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் ராமசாமி, அவரின் சகோதரிகள் செல்வி, பாரதி ஆகியோர் மீது 498(ஏ), 294(பி), 506(1) என்கிற நம்பிக்கை மோசடி, மிரட்டுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், திருமணப் பத்திரிக்கையில் குறிப்பிட்டது போல் இன்றைய தினத்திலேயே ராமசாமியை திருமணம் செய்துள்ளார் சசிகலா புஷ்பா.