தி.மு.க.வை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவர்களோடு தொடர்பில் இருந்த கட்சி நிர்வாகிகள் மிரண்டுபோயிருக்காங்க. அதனால் பரிசோதனை, தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என அல்லாடுகிறார்கள்.
இந்த தி.மு.க. எம்.எல்.ஏக்களில் சிலருடன் அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் சிலரும் நட்பில் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளும் கரோனா மிரட்சியில் இருக்கிறார்கள்.
கரோனாவால் ஆளும்கட்சி பிரமுகர்களுக்கும், எதிர்க்கட்சி பிரமுகர்களுக்கும் இடையில் ரகசிய உறவுகள் இருப்பது வெளியே கசிந்திருக்கிறது. கடலூர் மேற்கு மாவட்ட எல்லையில் இருக்கும் இரண்டு மணல் குவாரிகளில் ஒன்றை அமைச்சர் சம்பத் தரப்பும், இன்னொன்றை அ.தி.மு.க எம்.எல்.ஏ. சத்யா தரப்பும் நடத்துகிறது.
இதை அம்பலப்படுத்த வேண்டிய தி.மு.க. புள்ளிகளே இவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். இதனால் தி.மு.க.வினரிடமிருந்தே அறிவாலயத்துக்கு ஒரு அதிரடிப் புகார் கடிதம் சென்றிருக்கிறதாம்.
ஏன் கண்டுகொள்ளவில்லை என்று விசாரித்தபோது, ஆளுந்தரப்பிலிருந்து கண்டுகொள்வதால் இதை கண்டுக்கலைன்னு சொல்கிறார்கள் கட்சியினர். நெய்வேலி எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரனையும், அவர் சகோதரரான பண்ருட்டி யூனியன் சேர்மன் சபா. பாலமுருகனையும் அமைச்சர் தரப்பு நெருங்கியிருப்பது சம்பந்தமாக, கடலூர் மேற்கு தி.மு.க. மா.செ. கணேசனிடம் புகார் செய்தோம், ஆனா இப்ப அவரும் சைலண்ட்டா இருக்கிறார். அமைச்சர் தரப்பு அவர் வரைக்கும் வந்திடிச்சின்னு புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்காம்.
தி.மு.கவுக்குள் நடக்கும் போட்டி அரசியலில் இப்படி பல புகார்கள் கிளம்புதுன்னு ஒருதரப்பும், தேர்தல் வந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்பதால், அ.தி.மு.க. அமைச்சர்கள் தரப்பு இப்பவே தி.மு.க தரப்பிடம் நெருக்கம் காட்டுகிறது என்று இன்னொரு தரப்புபினரும் சொல்கின்றனர். கட்சி மேலிடம் விசாரித்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்கிறார்கள் கட்சியினர்.