Skip to main content

நெஞ்சுவலியால் தாய் உயிரிழப்பு: அழுதபடியே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மகன்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

Published on 28/03/2018 | Edited on 28/03/2018
covai

வெங்கடேஸ்வரி


கோவை வடவள்ளி பொம்மனாம்பாளையம் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 36). இவரது மனைவி வெங்கடேஸ்வரி (32). இவர்களது மகன் அன்புச்செல்வன் (15) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி வருகிறார்.

anbuselvan

அன்புச் செல்வன்
 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமச்சந்திரனும், வெங்கடேஸ்வரியும் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்ததில் இருவரும் காயம் அடைந்தனர். அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருவரும் சிகிச்சை பெற்று விட்டு வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில் நேற்று காலை வெங்கடேஸ்வரி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து நடந்தபோது ஏற்பட்ட காயத்தால் அவர் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது என்று டாக்டர் கூறினார்.
 

anbuselvan house

வெங்கடேஸ்வரியின் வீடு

இந்நிலையில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வு நடைபெற்றது. வெங்கடேஸ்வரியின் உடல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. தற்போது பொதுத் தேர்வு நடைபெற்று வரும் சூழலில், தாயின் இறப்பு ஒரு புறம் இருந்தாலும் தேர்வை எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் சோகத்துடன் அழுதபடியே பள்ளிக்கு வந்து மாணவர் ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வை எழுதி சென்றார். தேர்வு எழுதும்போது ஆசிரியர்கள் அரவணைப்பாக இருந்து அவருக்கு ஆறுதல் அளித்தபடி தேர்வு எழுத வைத்தனர். அழுதுகொண்டே அவர் தேர்வு எழுதியது நெஞ்சை உருக்குவதுபோல் இருந்தது.
 

balamurugan

பாலமுருகன்

வெங்கடேஸ்வரியின் உடல் அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு கொண்டு செல்லப்பட்டது. தேர்வு முடிந்தவுடன் மாணவன் அன்பு செல்வனையும் உறவினர்கள் திண்டுக்கல் அழைத்துச் சென்றனர் என தெரிவித்தார் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலமுருகன்.